பிரதான செய்திகள்

அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கூட்டம் நடாத்த விமல் கூட்டணி மந்திர ஆலோசனை

அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில வீட்டில் இரகசிய கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளின் 11 தலைவர்கள் அண்மையில் கொழும்பில் ஆரம்பித்த மக்கள் சபை கூட்டத் தொடரை நாடு முழுவதும் மாவட்ட மட்டத்தில் நடத்த தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டில் நடந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன எனவும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உயிரே போனாலும் கண்ணியத்தை இழக்க மாட்டோம்! முஸ்லிம் மாணவிகள் (விடியோ)

wpengine

அல்லாஹ்வையும்,பெருமானாரையும் நிந்தித்து வரும் ஞானசார தேரர்! றிசாட் ஆவேசம்

wpengine

சம்பூர் அனல்மின்நிலையத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வவுனியாவில்

wpengine