(அஷ்ரப் ஏ சமத்)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 15- 32 வருடங்கள் சேவையாற்றிய 1230 ஊழியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் சம்பள அதிகரிப்புக்கான கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) மாளிகாவத்தையில் உள்ள பிரதீபா மண்டபத்தில் வைத்து அமைச்சா் சஜித் பிரேமதாசா தலைமையில் நடைபெற்றது.
நாட்டில் உள்ள சகல 24 மாவட்டங்களிலும் உள்ள தேசிய வீடமைப்பு மாவட்ட அலுவலங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திலும் சேவையாற்றுகின்ற சாதாரண ஊழியா் தொட்டு – பொது முகாமையாளர் வரை தரத்திலான ஊழியா்களது சேவைக் காலத்தினை இனம் கண்டு அவா்களுக்கான கடிதங்களை அமைச்சா் வழங்கி வைத்தாா். இவ் வைபவத்தில் அமைச்சின் செயலாளா் டப்பிள்யு. கே.கே. அத்துக்கோரல தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் சாகர பலன்சூரியவும் கலந்து கொண்டாா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கள் உட்பட்ட ஊழியா்கள் உட்பட சகல ஊழியா்களுக்கும் எவ்வித அநீதி இழைக்காமல் இந்த உயா் பதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த வருடம் நுற்றுக்கு நுாறு சகல நிதிகளையும் கொண்டு சிறந்த சேவை செய்த அமைச்சாக வீடமைப்பு அமைச்சு விளங்குகின்றது. இநத அமைச்சின் ஊழியா்கள் அதற்காக தம்மை அர்ப்பணித்து செயல் ஆற்றினாா்கள். அதே போன்று இவ்வடும் 300 மாதிரிக் கிரமங்கள் நாடு முழுவதும் நிறுவும் திட்டம், வட கிழக்கில் யுத்தத்தினால் வீடுகழை இழந்த வீடுகள் நிறுவும் திட்டம் 24 மாவட்டங்களிலும் வீடமைப்புக் கடன்களை அறவிடும் திட்டங்களில் தம்மை அர்பணித்து செயல் ஆற்றுமாறும் அமைச்சா் சஜித் வேண்டிக் கொண்டாா்.