பிரதான செய்திகள்

அரசியல் பழிவாங்கல்! நீதி மன்றம் செல்லும் பொன்சேக்கா

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அதிகாரமற்றதாக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (09) ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வூப்பெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன, உறுப்பினர்களான சந்ரசிறி ஜயதிலக மற்றும் சந்ரா பெர்ணான்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களுடன் சேர்த்து சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான குற்றச்சாட்டுக்களுக்கு ´பொறுப்பு கூற வேண்டியவராக´ தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரத் பொன்சேக்கா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்த விதம் முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள சரத் பொன்சேக்கா, தமக்கு வழங்கப்பட்ட கடமைகளுக்கு அப்பால் சென்று ஆணைக்குழு செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நோன்பு பெருநாளை கொண்டாடிய சிறுவன் ஆடிய நடனம் ; இணையத்தில் பிரசித்தி

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கட்டார் நிகழ்வு இடமாற்றம்

wpengine

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம்!பிரதமர் வழங்கிவைத்தார்.

wpengine