அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்ட உள மற்றும் சமூக ரீதியான பாதிப்புக்களுக்கும், வழக்கு விசாரணைகளுக்காக செலவிடப்பட்ட தொகைகளுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கும் யோசனைத் திட்டமொன்றை பிரதமர் முன்மொழிந்துள்ளார்.
இதன்படி அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நட்டஈட்டுத் தொகை அல்லது வேறும் நியாயமொன்றை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வழக்குத் தொடரப்பட்டு பின்னர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரும் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்கள் என அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க அல்லது வேறும் நிவாரணங்களை வழங்க நிபுணத்துவ குழு ஒன்றை நிறுவ வேண்டுமென மேலும் பரிந்துரை செய்துள்ளார்.