சமஷ்டி முறையிலான அரசியலமைப்பொன்றை உருவாகக்கி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. அதற்கு எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டையிடுகின்றனர். எனவே அவ்வாறான மக்கள் பிரதிநிதிகளை கைது செய்து மௌனிக்க வைக்கின்றனர் என்று சுதந்திர முன்னணியின் தலைவரும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் கைது செய்யப்படுள்தை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.