பிரதான செய்திகள்

அரசியல் நிலையினை மாற்றி சின்னத்தை வைத்து அரசியல் செய்யும் சாணக்கியம்

(ரிஸ்வான் மதனி)

இலங்கை வாழ் முஸ்லிம்கள் முன்புபோல் அன்றி சமூக அரசியல் பிரச்சினைகளை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் காலத்தில் இருந்த பேரம் பேசும் அரசியல் நிலை மாறி சின்னங்களை வைத்துக் கொண்டு பல கட்சிகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகவே இருக்கின்றனர்
ஜனாஸா , திருமண வைபவங்கள், பரிசளிப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் ஸலாம் சொல்லி முஸாபஹா செய்யும் அரசியல் தலைவர்கள் தமது கட்சி என்று வருகின்ற போது பிற முஸ்லிமைத் தூற்றும் நிலை இன்னும் மாறவில்லை என்பதே உண்மை.

புதிய மாற்றம்
முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிகளில் ஒருவராக அறியப்படும் ஹஸன் அலி வயது முதிர்ந்த அளவு அரசியலில் முதிர்ச்சி பெற்றவரா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அவரது மகனின் தரத்தில் உள்ள துடிதுடிப்பான இளம் வயதை உடைய அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய அமைப்பைத் தோற்றுவித்து, அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட களம் இறங்கி இருப்பது ஒரு வகை சாணக்கியம்தான். இதில் முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீம் விட்ட தவறும் இங்குதான் உள்ளது.

இனியும் வாய்ச்சவடால்களால், பொய்யான வாக்குறுதிகளால், ஆதவன் எழுந்து வந்தான் பாடல்களால் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது என்பதை இது உணர்த்தி உள்ளது.

இதற்குள் சமூகத்தில் அறியப்படும் நல்லாட்சிக்கான தேசிய இயக்கமும் களத்தில் குதித்துள்ளனர். இவர்கள் முஸ்லிம் அரசியல் களம் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

எனவே இந்த மூன்று கட்சிகளுக்கும் மத்தியில் பாரிய போட்டி நிலவப் போகின்றது. அத்துடன் தேர்தல் களத்தில் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Related posts

அமைச்சர் பைசர் முஸ்தபா மீது குற்றம்சுமத்தும் சாய்ந்தமருது இக்பால்

wpengine

100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு

wpengine

778 வர்த்தகர்களுக்கு எதிராக வன்னியில் வழக்குத் தாக்கல்

wpengine