பிரதான செய்திகள்

அரசியல் கட்சி ஒன்றின் கொள்கைக்காக ஞானசார குரல் கொடுக்கின்றார்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பேசும் பாணியை மாத்திரமல்ல, அவரது அரசியல் கட்சியின் கொள்கைகளையும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் கட்சி ஒன்றின் கொள்கைக்காக ஞானசார தேரர் குரல் கொடுத்து வருகிறார்.

நானும் அரசியல்வாதி என்ற முறையில் அரசியல் கட்சி ஒன்றின் கொள்கையின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டு வருகின்றேன் என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சைட்டம் எதிர்ப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட டிலான் பெரேரா, தான் சைட்டம் நிறுவனத்திற்கு எதிரானவன் என்ற போதிலும் அமைச்சுக்குள் புகுந்து அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை எனக் கூறியுள்ளார்.

Related posts

வவுணதீவு பிரதேச செயலக வருடாந்த கலாச்சார விழா

wpengine

மன்னாரில் கனிய மணல் அகழ்விட்கான கலந்துரையாடல் – மக்களின் மத்தியில் எதிர்ப்பு .

Maash

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

wpengine