பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரசியல்வாதிகளையும்,உதவி செய்தோரையும் கௌரவித்த வவுனியா

வவுனியா – கணேசபுரம் பகுதியில் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கணேசபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இரா.சுப்பிரமணியம் தலைமையில் இந்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

கடந்த 40 வருடங்களாக இந்த பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்து கணேசபுரம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 6 கிராம மக்களுக்கு கடந்த மாதம் வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையினூடாக 1100 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் பிரதிநிதிகள், வவுனியா பிரதேச செயலாளர், காணி கிளையின் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இதன்போது நன்றி தெரிவித்து,கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, பிரதேச செயலக காணிக்கிளையின் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், முன்னாள் கிராம சேவையாளர், கணேசபுரம் பகுதியிலுள்ள 6 கிராம அபிவிருத்திச்சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

தேங்காய் விலை வேகமாக சரிவு..!

Maash

இரணைத்தீவில் நல்லடக்கம் ஓர் இராஜதந்திர நகர்வை, அரசாங்கம் மேற்கொள்கின்றது’

wpengine

பட்டியல் உறுப்பினர்களுக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தவேண்டிய நிலையே

wpengine