பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பித்த கல்வி அமைச்சர்

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அமைச்சரின் மகள் மற்றும் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று இடம்பெற்றது.

சமகால அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பொறுப்பினை வகிக்கும் அகில விராஜ் காரியவசம், ஆடம்பரமின்றி மிகவும் எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

தனது மகன் மற்றும் மகளின் பிறந்த நாளுக்காக வித்தியாசமான முறை ஒன்றினை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார்.

இலங்கையிலுள்ள சிறுவர் காப்பகங்கள் சிலவற்றிற்கு சென்று சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை அமைச்சர் வழங்கி வைத்தார்.
பொதுவாக பிரபல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவர்.
எனினும் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் செயற்பாடு பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

”சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்டால் இனவாதியா? புத்தளத்தில் ரிஷாட் கேள்வி”

wpengine

ஆட்சியாளர்கள் 24 மணித்தியாலங்களும் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றனர்

wpengine

முஸ்லிம்களின் ஜனாஷா எரிப்பு ஐ.நா.சபை மஹிந்தவுக்கு கடிதம்

wpengine