Breaking
Sat. Nov 23rd, 2024

இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான “FORBES” சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள்.நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள்.

நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.
இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள்.

முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள் .

முதலாமிடம் – மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)

இரண்டாமிடம் – அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)

மூன்றாமிடம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)

நான்காமிடம் – ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)

ஐந்தாமிடம் – கருணா (17 லட்சம் டொலர்)

ஆறாமிடம் – ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)

ஏழாமிடம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)

எட்டாம் இடம் – ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)

ஒன்பதாம் இடம் – ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)

பத்தாம் இடம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்)

இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *