அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15000 ரூபாவை விசேட கொடுப்பனவாக வழங்க தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
அதற்கான சுற்றறிக்கையை எதிர்வரும் வாரம் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குமாறு கோரி கடந்த அரசாங்கத்தின் அரச நிறைவேற்று அதிகாரிகளின் சங்கம் தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தது.
இது தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு 15000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.