அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச பணியாளரின் ஆற்றல் மற்றும் திறன்களின் அடிப்படையிலான பதவி உயர்வு கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரச சேவையை செயற்றிறன் மிக்கதாக மாற்றி மக்கள் நேய சேவையாக மாற்றவுள்ளதாக அரச நிர்வாக இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச பணியாளரின் ஆற்றல் மற்றும் திறன்களின் அடிப்படையிலான பதவி உயர்வு கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் கீழ் பொறுப்பின் பெறுமதி என்ற தொனிப்பொருளில் அரச பணியாளர்களின் ஆற்றல்களை மதிப்பிடப் போவதாக அமைச்சர் கூறினார்.
அரச சேவையில் பிரஜைகளை மதிப்பிட்டு, சுய விமர்சனம் செய்யும் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திரு.மத்தும பண்டார தகவல் அறிவித்தார்.