வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று(27) 5 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வட மாகாணத்தின் பிரதம செயலாளர், மன்னார் மாவட்ட செயலாளர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், மதத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.







