2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பில், எதிர்க்கட்சி உறுப்பினரான இலங்கை தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு நேற்று (21) இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இதில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகள் கிடைத்த நிஎதிராக 45 வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பில் அரசாங்கம் 114 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தனது முடிவு குறித்து, அத தெரண செய்தி சேவைக்கு தனது கருத்துகளை தெரிவித்திருந்தார்.
“இது அரசாங்கத்தின் முதல் பட்ஜெட். மக்கள் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். நாட்டிற்கு ஒரு நல்ல விடயம் நடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எமது நாட்டு மக்களின் கருத்துக்கள் மற்றும் விருப்பத்துடன்தான் நான் செயற்படுவேன்.
அதனால்தான் நானும் ஆதரவாக வாக்களித்தேன்.”
“நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அரசாங்கம் மக்கள் நினைத்தவாறு செயல்படுமா? என்பதைப் பார்ப்போம். மக்கள் கொடுத்துள்ள அதிகாரத்திற்கு எதிராக செயல்படுவதை விட, மக்களுக்காக எங்கள் ஆதரவை வழங்குவதுதான் நாம் செய்ய வேண்டும்” என்றார்.