Breaking
Fri. Nov 22nd, 2024

தற்போதைய அரசாங்கம் பல்வேறு பொய்யான காரணங்களை முன் வைத்து மக்களை அவமதிப்புக் குள்ளாக்கி நடத்த வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாகவும், அரசாங்கம் அவ்வாறு முன் வைக்கும் சகல காரணங்களும் பொய்யான காரணங்கள் என்றும், இது நாட்டு மக்களையும் சகலரையும் ஏமாற்றும் விடயம் என்றும், இந்த ஜனநாயக விரோதச் செயலைத் தொடர அரசாங்கம் மேலும் பல யுக்திகளைப் பயன்படுத்தி வருவதாகவும், வேறு வழிகளில் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை மீள அழைக்கும் தீவிர ஜனநாயக விரோத நடவடிக்கையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உறுப்பினர்களான ஜயந்த கெடகொட மற்றும் எதிரிமான்ன ஆகியோரின் முன் மொழிவுகள் ஊடாக இந்த அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றும் சர்வஜன வாக்கெடுப்பு வெற்றியின் பின்னர் இந்த தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணை சட்டமாக செயற்படுத்தப்பட வேண்டுமென சட்டமா அதிபர் சட்ட வியாக்கியாணம் வழங்கியுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தர் இந்த முயற்சியை முறியடிக்க சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் உதவியை நாடி இதனை சட்ட ரீதியாக தோற்கடிப்பதுடன், எதிர்காலத்தில் தேர்தல் முறைமைக்கு ஏற்படக் கூடிய மரண அடி மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிக்க ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) தெரிவித்தார்.

எதிர்க் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயக கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் சரியான நேரத்தில் நடத்துவது ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம், ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க் கட்சிகள் சகலரினதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வேலைத் திட்டதை ஆரம்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், தேர்தலை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்திற்குச் சென்ற போது, அரசாங்கத்தின் உறுப்பினர்கள் நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவின் முன் நிறுத்த முற்பட்டனர்.

என்றும், உயர் நீதிமன்றத்தையும் அதன் நடுநிலையான நீதிபதிகளையும் கூட சங்கடப் படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள்.

என்றும், நிறைவேற்று அதிகாரம் கூட நீதித் துறையில் தலையீடு செய்வதாக தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர், கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த நேரத்தில் தேர்தலை நடத்த ஆளும் எதிர்க் கட்சிகள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

A B

By A B

Related Post