பிரதான செய்திகள்

அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என் முன்னாள் வௌியுறவு அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை! ஏமாற்று நாடகமா?

wpengine

தந்தையின் இறுதி சடங்கு! பரீட்சைக்கு சென்ற சிறுமி! மனங்களை கனக்க வைக்கும் துயரம்

wpengine

யோஷித்த ராஜபக்ச மோதல்! பொலிஸ் விசாரணை

wpengine