பிரதான செய்திகள்

அரசாங்கம் தமிழ்,முஸ்லிம் மக்களை மறந்து பயணிக்கமுடியாது.

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் பெரிய பங்களிப்பை வழங்கியதால், அவர்களை மறந்து விட்டு அரசாங்கம் முன்னோக்கி பயணிக்க முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அக்கரைபற்று நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் 45 வீதமானவர்கள் தற்போது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களை மறந்து விட்டு தற்போது அரசாங்கம் முன்னோக்கி செல்ல முடியாது.

சிங்கள பிரதேசங்களை விட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அன்னப் பறவை சின்னத்திற்கு அதிகளவான வாக்குகள் கிடைத்தன. முஸ்லிம் மக்களுக்கு சமவுரிமையை பெற்றுக்கொடுக்கும் வரை போராடுவேன்.

இதேவேளை, நாட்டின் பல இடங்களில் குழப்பத்தை அடிப்படைவாதிகளே உருவாக்கின்றனர் எனவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வீட்டில் இருந்து வேலை செய்யும் காலம் நீடிப்பு

wpengine

இலங்கைக்கு புதிதாக வரும் நாணய குற்றி,நாணய தாள்

wpengine

சவூதி அரேபியாவின் நெருக்கடி! இஸ்ரேல் நாட்டில் தடை

wpengine