பிரதான செய்திகள்

அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து பாரியளவில் வேறுபாடில்லை .

மனித உரிமை பேரவையில் அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

கடந்த மாதம் 25ஆம் திகதி இடம்பெற்றிருந்த 25ஆவது மனித உரிமை பேரவையில் எமது வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தார். கடந்த வருடம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பல விடயங்கள் அங்கு கையாளப்பட்டிருந்தன.

எனினும் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கம் பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. மனித உரிமை தொடர்பில் பல விடயங்களை அமைச்சர் கூறி இருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

எமது நாடு பொருளாதார ஸ்திரதன்மைற்று இருக்கிறது. அதில் இருந்து  மீள்வதற்கு தேவையான விடயங்களை செய்துவருகிறது என்பதை நாங்கள் அறிவோம். தமிழ் பேசும் பொலிஸார் இணைத்துக்கொள்ளல் போன்ற பல விடயங்களை தெரிவித்திருந்தீர்கள்.

ஆனால் இவை அனைத்தும் ஒரு அடையாளமாக மட்டுமே எமக்கு தெரிகிறது. அதிகாரிகளிடமிருக்கும் பணி நிலை தொடர்பான செயற்பாட்டையே நீங்களும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். 

அதன் நடைமுறைகள் தொடர்பில் தெரிவித்திருக்க வேண்டும். பொறுப்புக்கூறும் விடயம் காலதாமதாகி இருக்கிறது. இது தொடர்பில் சர்வதேச எம்மை குற்றம் கூறி இருக்கிறது.

மனித உரிமை ஆணைக்குழு தொடர்பில் இலங்கையில் மனித உரிமை செயற்திட்டம் தொடர்பில் நேற்று ஆவணம் ஒன்று வெளிவந்திருக்கிறது.

இணையத்தளத்தில் அது இருக்கிறது. செப் டெம்பர் அமர்வுகளுக்காக தயாராகி வருவதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அக்காலப்பகுதியில் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் எடுத்த முன்னேற்றம் தொடர்பில் கூறுவதாக தெரிவித்திருந்தார்.அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் தற்போது மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிட்டிருக்கும் அறிக்கையை அரசாங்கம் பார்க்க வேண்டும். 

அதில் பல்வேறு தலைப்புகளில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. நீதி நியாயம் தொடர்பில் உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டு தொடர்பில் கேட்கப்பட்டிருக்கிறது.

எதிர்காலத்திலான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 (1) பிரேரணைக்காகவும் அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று பொறுக்கூறும் விடயத்தில் அவர்கள் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதல், தேசிய ரீதியாக அல்லது பிராந்திய ரீதியாக அல்லது சர்வதேச ரீதியாக அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனவே கடந்த காலத்தில் இடம்பெற்ற அனைத்து தவறுகளும் இங்கு திருத்தப்பட்டிருக்கின்றன.பல கோரிக்கைகள் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை வன்முறைகள் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பின்பற்றப்படும் மரபுரிமைகள் இதற்கான டிஜிட்டல் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, இந்த சாட்சியங்களும் தரவுகளும் சுருக்கமாக பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளன.

எனவே அரசாங்கத்தின் புலனாய்வு துறையை பயன்படுத்தி அனைத்து சிவில் அமைப்பினராலும் இதனை செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையை கண்டறிவதற்கு பல விடயங்கள் நாங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்.

உண்மையை கண்டறிதல் எனும்போது முஸ்லிம்கள் பாரிய துன்பங்களுக்கு முகம்கொடுத்திருக்கின்றார்கள். முஸ்லிம்கள, தமிழர்கள் சிங்களவர்கள் என அனைவரும் துன்பப்பட்டிருக்கிறார்கள். 

அதனால் நாங்கள் இதில் இருந்து வெளியில் வரவேண்டும். மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய அனைத்தும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

தேசிய கால்ப்பந்தாட்டப் போட்டியில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை

wpengine

காத்தான்குடியில் முப்பெரும் விழா

wpengine

வில்பத்து பாதை மக்கள் பாவனைக்கு! நான்காவது பிரதிவாதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

wpengine