Breaking
Fri. Nov 22nd, 2024

அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் ஒரு குழுவை அவர் வழிநடத்தவுள்ளதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்த குழுவொன்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இருப்பதாக அரசாங்க உயர் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வித நியாயமான காரணமும் இன்றி தனது முன்னாள் கல்வி மற்றும் மின்துறை அமைச்சரை நீக்கியமையால் அழப்பெருமவும் கடும் அதிருப்தி அடைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமின்றி கடந்த பொதுத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிபுன ரணவக்க வேட்புமனு தாக்கல் செய்தமையிலும் அழகப்பெரும அதிருப்தி அடைந்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஜே.வி.பியுடன் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டு்ள்ளது. 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *