பிரதான செய்திகள்

அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து நீக்கி புதிய அரசியல் தலைமையை உருவாக்குவோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடந்த தோ்தலில் முழுமையாக ஆதரவளித்த சிங்கள ராவய அமைப்பு, அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து நீக்கி புதிய அரசியல் தலைமையை உருவாக்கப்போவதாக எச்சாித்துள்ளது.

சிங்கள ராவயவின் தலைவா் அக்மீமன தயாரத்ன தேரா் இந்த எச்சாி்க்கையை இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது விடுத்துள்ளாா்.

தொடா்ந்தும் ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தாம் தயாாில்லை என்று குறிப்பிட்ட அவா், அரசாங்கம் தேசிய வளங்களை வெளிநாடுளுக்கு விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டாா்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக தொிவித்த அவா், எதிர்காலத்தில் அரச பணியாளா்களுக்கு வேதனங்களை வழங்குவதற்கு கூட இயலாத நிலை ஏற்படலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் 11 கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, வெளிநாடுகளுக்கு தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் செயற்பாட்டுக்கு எதிராக போராடவேண்டும் என்று அவா் கோாிக்கை விடுத்துள்ளாா்.

அரசாங்கம் செயலிழந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி உட்பட்ட எதிா்க்கட்சிகளும் செயலிழந்துள்ளதாக அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.     

Related posts

சிவப்பு அறிக்கை வௌியிட்டிருந்த 3 குற்றவாளிகள் துபாயில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தல்.

Maash

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா அரபுக் கல்லூரியின் ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ரிஷாட்!

Editor

பல கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் நடவடிக்கையில்! பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine