பிரதான செய்திகள்

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நியமித்தது நாமே! இராஜாங்க அமைச்சர் தயாசிறி

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தனிவழி செல்வது குறித்து நாம் எப்போதும் சிந்தித்ததில்லை என தெரிவித்த பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க  அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஆனால் அரசாங்கத்துக்குள் இருந்தவாறே, எமது கட்சியை பலப்படுத்தி முன்னோக்கி செல்​வோம். ஏனெனில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நியமித்தது நாமே என்றார்.

நேற்று முன் தினம் (18) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தையும் பலப்படுத்திக்கொண்டு, தமது கட்சிகளையும் பலப்படுத்திக் கொண்டால் தானே முன்​னோக்கி பயணிக்க முடியும். எனவே, இந்த அரசாங்கத்துக்கு எதிராக எவ்வித முரண்பாடுகளும் எம்மிடம் இல்லை. இருக்கும் பிரச்சினைகளை நாம் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொண்டுமுன்னோக்கி செல்வோம் என்றார்.

Related posts

விமல் தலைமையிலான அணி ஆதரவு மீண்டும் இவருக்கு

wpengine

உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் 8300 மெட்ரிக் டொன் யூரியா நன்கொடை!

Editor

மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா!

Editor