Breaking
Sat. Nov 23rd, 2024

இன்றைய அரசாங்கத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.558

இதன் பின்னர் தனது அமைச்சிலிருந்து வெளியேறிய அவர், இந்த பதவி நீக்கமானது தனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து அந்த நேர்காணலில் அவர் தெரிவித்ததாவது,

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நிகராகக் கூட படிக்காத ஒருவரால் இன்று நாடாளுமன்றம் ஆளப்படுகிறது. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

இதேவேளை, அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தோல்வியடைந்ததாகக் கூறி அவர்களைக் கடந்து செல்வார்களா என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள தவறான விடயங்களை சரி செய்து கொண்டு ஆட்சியாளர்கள் செல்வார்களாயின் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையாக அமையும் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் விஞ்ஞான ரீதியான முடிவுகள் மற்றும் தீர்மானங்களில் பிரச்சினை காணப்படுவதாகவும், விவசாய மற்றும் வர்த்தக அமைச்சர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் யாரால் நடத்திச் செல்லப்படுகின்றது என்ற கருத்தினை வெளியிட முடியாது ஆனாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் இந்தப் பொருப்புக் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிர் காலத்தில் மக்கள் ஆதரவு மட்டுமல்ல பெரும்பான்மை பலம் இருக்குமா என்று சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *