பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய பௌத்த பிக்கு குழுவினர்

அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய பௌத்த பிக்குகளின் அமைப்பொன்றை ஏற்படுத்த போவதாக முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொரளையில் இன்று நடைபெற்ற தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய சக்திகள் அமைப்பின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

15 பிக்குமாரின் பங்களிப்புடன் இந்த பிக்குகள் அமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கு மாநாயக்க தேரர்களின் ஆசியும் கிடைத்துள்ளது.

மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

எனினும் நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்ய அதிகாரத்தை வழங்கவில்லை.

அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்து முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் இதன் மூலம் மிகப் பெரிய பௌத்த பிக்குகள் அமைப்பை உருவாக்கவுள்ளதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்! மு.கா. கட்சியில் குழப்பம்

wpengine

கலாபூசண விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

wpengine

தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். கொலை செய்து கடலில் போட்டனர்.

wpengine