கொள்கை ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிழை விடுகின்றது என்றால் நிச்சயமாக அரசாங்க தரப்புக்கு விலை போய் இருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பொருத்தமான கட்சியல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாக நாங்கள் விமர்சிக்கின்றோம் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை எதிர்க்கவேண்டும் என்பதற்காக அல்ல.
எங்களைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிழை விடுகின்றது. நிச்சயமாக அரசாங்க தரப்புக்கு விலை போய் இருக்கின்றது.
தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாஷைகளை மீறுகின்ற வகையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வர முயற்சிக்கப்படுகின்றது. அதனை நாம் எதிர்க்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.