அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அரகலய இழப்பீடு பெற்றவர்கள் சொத்து விபரங்களை நாடாளுமன்றில் வழங்கியுள்ளனரா? விசாரணை ஆரம்பம் .

அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் எனவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

Related posts

யாழ்ப்பாண காதலன் கொழும்பு காதலிக்கு எழுதிய கடிதம்

wpengine

Galzxy Note7 வெடிக்கும் அபாயம்! மீளபெறும் சம்சங் நிறுவனம்

wpengine

65,000 வீடுகள் விவகாரம்: சுவாமிநாதனுக்கு சுமந்திரன் கடிதம்

wpengine