பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்- பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை  சம்மாந்துறை சவளக்கடை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் வீணாக ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த சனிக்கிழமை (21)காலை முதல் மாலை வரை  முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு தரப்பினரின் வேண்டுகோளிற்கு இணங்க கல்முனை, கல்முனை குடி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற மத வழிபாட்டு தலங்களில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் ஒலிபெருக்கி வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வீடு வீடாக கிராம சேவகர்களின் உதவியுடன் பொலிஸார் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதேவேளை பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

அத்தியவசிய சேவையான சுகாதார சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கல்முனை வைத்திய சாலைகளுக்கு வரும் நோயளர்கள் அவசர சிகிச்சை பிரிவுகள் ஊடாக சிகிச்சைகளை பெற்றுச் செல்வதையும் காணக்கூடிதாக இருந்தது.

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

wpengine

2054 இல் அனைத்து மதங்களும் அழிந்துவிடும் : பௌத்த தர்மமே கோலோச்சும் – அமைச்சர் ராஜபக்ஷ

wpengine

நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து கடிதம்

wpengine