(அஷ்ரப் ஏ சமத்)
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பல வருடங்களாக எதிர்நோக்கிவரும் சில நீண்டகாலப் பிரச்சினைகள்நாளை அம்பாறை செல்லும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு –
இவ் விடயங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தபால் முலமும் ஈமெயில் மூலமும் ஏற்கனவே அனுப்பட்டுள்ளதாக ஈமாம் கொண்ட என்ற இயக்கம் அறிவித்துள்ளது.
– பொத்துவில் – முஸ்லிம்களின் பூர்வீக காணிப்பிரச்சினை (இறத்தல், கரங்கோ, பொத்தான, தகரம்பொல, உடும்புக்குளம் ஆகியகாணிகள்) முஸ்லிம் மீனவர் பிரச்சினை, பாதுகாப்புத் தரப்பினரால் எதிர்நோக்கும் அசௌகரியங்களை உடன் தீர்த்து வைத்தல்.
– அக்கரைப்பற்று – முஸ்லிம்களின் வட்டமடு மேச்சல் தரை மற்றும் விவசாயக் காணிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்
– முன்னாள் அமைச்சா் பேரியல் அஸரபினால் முயற்சியினால் அக்கரைப்ற்று நுரைச்சோலையில் சவுதி அரசினால் வழங்கப்பட்ட
500 வீடுகள் கொண்ட சுனாமி வீடமைப்புத் திட்டத்தினை வீடில்லாமல் வாழும் முஸ்லீம் குடும்பங்களுக்கு மீள கையளிக்கநடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
-சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் இளைஞா்களுக்கான தொழில் வசதி வாய்ப்புக்கான தொழில் பேட்டைகள்
பாற்பண்னை, நெல் சந்தைப்படுத்தும் களஞ்சிய சாலை, பசளை களஞ்சியசாலை நிர்மாணித்தல்
-நுரைச்சோலையில் முஸ்லிம்களால் செய்யப்பட்டு வந்த விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள பொருத்தமான தீர்வை வழங்க வேண்டும்.
– அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்திரடமிருந்து மீட்டுத் தரவேண்டும்.
– ஒலுவில )- துறைமுகத்திட்டத்தினால் பாதிப்படைந்துள்ள முஸ்லிம்களுக்கு உடன் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுத்தல், கடலரிப்பைதடுக்க உரிய திட்டத்தை வகுக்க வேண்டும்.
– ஓலுவில் துறைமுகம் மீன்பிடித்துறைமுகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்தல்
– கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவிவரும் வைத்தியா, தாதியா் விடுதிகள் மற்றும் கட்டிட வசதிகள் இன்மை.
– கல்முனை சாஹிராக் கல்லுரிக்கு கட்டிடங்கள் மற்றும் கூட்ட மண்டபம், மைதாணம் போன்ற குறைபாடுகள் நிவா்த்தி செய்யப்படல் வேண்டும்
– சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை பிரகடனப்படுத்துவதற்கான கால எல்லையை அறிவிக்க வேண்டும்.
– சாய்ந்தமருது, கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் ஆகிய பிரதேச முஸ்லிம்கள் எதிர்நோக்கும் குடியிருப்பு நிலப் பற்றாக்குறைபிரச்சினையை தீர்ப்பதற்கான செயலணியை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
-மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தை உண்மையாக பாதிப்புற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
– அம்பாறைமாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மாவட்ட ஆயுல்வேத வைத்தியசாலைகள் உருவாக்கப்படல் வேண்டும்.
– கல்முனை சந்தாக் கேணியில் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவந்து சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்
– கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனை நவீன நகரமாக நிர்மாணிக்கப்படல் வேண்டும்.
- – கல்முனை மாநகர சபைக்கு சகல வசதிகளும் கொண்ட செயலகம் நிர்மாணிக்கப்படல் வேண்டும்
- – சம்மாந்துறை – அம்பாறை நகருக்கிடைப்பட்ட முஸ்லிம்களின் விவசாயக் காணிப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்
- – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தரமுயா்த்தப்பட்டு கல்முனையில் மீள ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
- – மட்டக்களப்பு புகையிரத நிலையம் கல்முனை- பொத்துவில் வரை விஸ்தரிக்கப்படல் வேண்டும்.
- – அட்டாளைச் சேனையில் உள்ள கல்விக் கல்லுாரி ஆசிரிய பல்கலைக்கழக கல்லுரரியாக தரமுயத்தப்படல் வேண்டும். அத்துடன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை அபிவிருத்தி செய்தல்,
- – யுத்த காலத்தில் பயங்கரவாதிகளினால் உயிழந்தவா்களுக்கு நஸ்ட ஈடு மற்றும் உயிரிலந்து முஸ்லீம் பொலிஸ், ஊர்காவல் படை அவா்களது குடும்பங்களுக்கு நஸ்ட ஈடுகள் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள்
- – கல்முனையில் உள்ள நகர அபிவருத்தி உப அலுவலகமும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகமும் கரையோர மாவட்ட அலுவலகமாக தரமுயா்த்தப்படல் வேண்டும்.
– சாய்ந்தமருது மீன்பிடித்துறை முகம், ஜஸ் பெக்டறி நிர்மாணிக்கப்படல் வேண்டும்.
- – சாய்ந்தமருது தொட்டு காரைதீவு, நிந்தவுர், தோனா மற்றும அதனிடையே வரும் பாலங்கள் மற்றும் இருமருங்கிலும் செப்பணிட்டு பூங்காங்கள் அமைத்து அழகுபடுத்தல் வேண்டும்.
- – தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் வகிபாகம் போன்ற விடயங்களில் முஸ்லிம்கள்மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சந்தேகப் பார்வை.
- – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரபின் மரணத்தில் ஒழிந்துள்ள மர்மத்தை கண்டறிய விஷேடஆணைக்குழு நியமிக்கப்படும்
மேற்சொன்ன பிரச்சினைகள் அனைத்துமே அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கும் ஆதங்கங்களாகும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி, பிரதேச வாதம், அரச உயர் அதிகாரிகளின் இனவாதப் போக்கு போன்ற காரணிகளால் தான் மேற்சொன்னமுஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. என ஈமான் கொண்ட அமைப்பு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.