Breaking
Sun. Nov 24th, 2024

(ஜெமீல் அஹ்மட்)

அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் சம்மாந்துறை பொத்துவில் கல்முனை போன்ற பிரதேச சபைகளின் ஆட்சியின் அதிகாரத்தை மக்கள் தற்போது கொடுத்து விட்டனர் ஆனால் தேர்தல் ஒன்று  நடைபெற்றால் இன்ப முகத்தோடு மயிலின் வெற்றியை உறுதிப்படுத்துவார்கள்  அதனால் அம்பாறை மாவட்ட அரசியல் நாயகனாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் மிகுதியாக உள்ள அக்கரைப்பற்று  என்பது தேசிய காங்கிரஸின் கோட்டை அங்கு அதாவுல்லாஹ்வை தவிர வேறு யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது அப்படி அதிகாரத்தை வேறு கட்சிக்கு வழங்க அக்கறைப்பற்று மக்கள் மீண்டும் தவறு செய்யமாட்டார்கள் என்பதை ஏனைய கட்சிகள் மறந்துவிடக் கூடாது அதனால் முஸ்லிம் காங்கிரஸ்.  மக்கள் காங்கிரஸ்  கட்சிகள்  அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது பகல்கனவு ஆனால் இன்றைய சூழ்நிலையில் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்துக்கு அதிகமான வாக்குகள் அக்கறைபற்றில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை அதனால் இது வரை எதிர்கட்சியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் மக்களால் ஓரங்கட்டப்பட்டு மக்கள் காங்கிரஸ் எதிர் கட்சி நாயகனாக பிரகாசிக்கும் இது தான் அக்கறைப்பற்றின் எதிர்கால அரசியல்.

அடுத்து நிந்தவூர் அட்டாளைச்சேனை பிரதேசம் என்பது முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய கோட்டை இன்று ஒரளவு வீழ்ச்சி கண்டுள்ளது நிந்தவூரில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவர் சுகாதார பிரதி அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன்  இருக்கின்றார்   அதுபோல் அட்டாளைச்சேனையில் மாகான சபை உறுப்பினர்  நசீர் அவர் சுகாதார அமைச்சராக இருக்கின்றார்  அத்தோடு தேசிய காங்கிரஸின் மகான சபை உறுப்பினர் உதுமாலெப்பை இப்படியானவர்கள்  இருக்கின்றார்கள்  இப்படி அரசியல் அதிகார பலத்தோடு இருக்கும் சபையை கைப்பற்றுவது என்பது மிகவும் கடினமான விடயம் ஆனால் இது வரை  மூடி மறைக்கபட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகுதாளங்கள் ஏமாற்று நாடகம் அரசியல் வியாபாரம் என்பன மக்களுக்கு தெரிந்து விட்டது அதனால் இன்று மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கும் நிலையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள் பொத்துவில் தொகுதி அமைப்பாளரை நம்பாமல் நிந்தவூர் அட்டாளைச்சேனை ஆகிய பகுதியில் முக்கியமான சில மாற்றங்களை  செய்தால் மட்டுமே வெற்றியை பெறலாம் .

அதாவது இந்த இரு பிரதேசங்களில் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய மக்கள் முன் துடித்து கொண்டு இருப்பவர்கள் அந்த பிரதேசத்தின்  அரசியல் அதிகாரத்தில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதியை எதிர்த்து அரசியல் செய்ய கூடிய எந்த தகுதியும் அற்றவர்களாகவே மக்கள் முன் காணப்படுகின்றனர் பொதுவாக தனித்து எந்த  விடயத்திலும் போராட முடியாதவர்கள் அதனால் இவர்களுக்கு பதிலாக அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்  அமைச்சர் நசீர் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் உதுமாலெப்பை நிந்தவூரில் பிரதி அமைச்சர் பைசால் காசிம் மாகான சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன்  ஆகியோரை எதிர்த்து  அரசியல் செய்பவரை இனம் கண்டு களத்தில் இறக்கினால் மட்டுமே  நிச்சயம் வெற்றி பெறலாம்  ஆனால் இப்போது மலையை இழுப்பேன் வானத்தை பிடிப்பேன் என்று வீரம் பேசுபவர்கள் மக்கள் மத்தியில் கோழைகள் இவர்களால் தான் கடந்த தேர்தலில் 1600 வாக்குகள் இல்லாமல் ஒரு ஆசனத்தை கட்சி இழக்க நேரிட்டது என்பதை தலைவர்  மறந்துவிடக் கூடாது.

அடுத்து வட்டார தலைவர்கள் சிலரின் விருப்பத்துக்கு ஏற்ப  நியமிக்கப்பட்டாலும் மத்திய குழு தலைவர் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமானவரை கட்சியின் தலைவர் நியமிக்க வேண்டும் அதனால் மத்திய குழு தலைவர் சுயாதினமாக செயல்பட முடியும் அதனால் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

 நிந்தவூர் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் வெற்றியை பெறுவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைகள் தான் கட்சிகளுக்கு ஏற்படும் அதற்கு ஏற்ப அரசியல் செய்ய கூடியவர்களை கட்சி நியமிக்கா விட்டால் தங்க ஊசி என்று எடுத்து  தனது கண்ணில் குத்திய கதை போல் தான் இந்த இரு பிரதேசங்களில் எதிர்கட்சியாக மக்கள் காங்கிரஸ் செயல்பட நேரிடும்.

எனவே இன்று அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு  மக்கள் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றன அதை ஸ்திரனப்படுத்த தலைவர் நடவடிக்கை எடுத்தால்  எதிர்வரும்  தேர்தல்களில் அமோக வெற்றியை பெற்று அதிக பிரதேச சபைகளில் மயில்கள் குடியேறி வாழும் என்பதில் சந்தேகமில்லை.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *