பிரதான செய்திகள்

அம்பாறை,கண்டி மோதல் சிங்கள முஸ்லிம் பிரச்சினை அல்ல

அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவம் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் இந்து ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸார் பொறுப்பின்றி நடந்து கொண்டதன் காரணமாக வன்செயல்கள் முற்றியது என்பதுடன், புலனாய்வுப் பிரிவினரும் நடக்க போகும் சம்பவங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை.

திகனயில் கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கு நடக்கும் தினத்தில் ஏதேனும் சம்பவங்கள் நிகழலாம் என நான் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் அதனை ஏற்கவில்லை என கூறியுள்ளார்.

Related posts

அமெரிக்க விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், ட்விட்டர் கணக்கு விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.

wpengine

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

wpengine

வர்த்தகமானி அறிவித்தல் வெளிவந்தால் 19ஆம் திகதி தேர்தல் மஹிந்த

wpengine