பல நபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகளை வெளியிட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் சதித்திட்டம் இருப்பதாக தகவல் வெளியிட்டதன் காரணமாக பிரபலமான நாமல் குமார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் இணைந்துக்கொண்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றியுள்ளார்.
தனக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கில் இருந்து தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தனக்கு நேர்ந்த அவமதிப்புக்காக மனித உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் நாமல் குமார, அந்த கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் இருப்பதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நாலக டி சில்வாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறி நாமல் குமார கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த விடயம் அப்போது பரப்பரப்பாக பேசப்பட்ட போதிலும் தற்போது அது தொடர்பான விசாரணைகள் உட்பட எந்த தகவல்களும் வெளியிடப்படுவதில்லை.