பிரதான செய்திகள்

அம்பாரை முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது தாக்குதல்! வாய்மூடிய நல்லாட்சி அரசு

இன்று நள்ளிரவை அண்மித்த நேரத்தில் நூற்றுக்கணக்கான குண்டர்கள் திடீரென்று ஒன்றிணைந்து அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களைத் தாக்க முற்பட்டுள்ளனர்.

பயங்கர ஆயுதங்களுடன் மூர்க்கத்தனமாக செயற்பட்டமையால் அம்பாறை நகரம் நள்ளிரவு நேரத்திலும் கடும்பதற்ற நிலையை எதிர்கொண்டிருந்தது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோருக்குத் தகவல் அளித்து பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபரை உடனடியாகத் தொடர்பு கொண்டு அம்பாறை நகரில் இயல்பு நிலையை ஏற்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட துரித செயற்பாட்டின் காரணமாக நகரில் தற்போது இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், பிரதமருக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அதிபர் இலஞ்சம் ஊழல்கள் ஆணைக்குழுவினால் கைது

wpengine

பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோ! 5 பேர் கைது

wpengine

வாழைச்சேனையில் பாதுகாப்பற்ற கடவை! முச்சக்கரவண்டி விபத்து

wpengine