Breaking
Sun. Nov 24th, 2024

(சிபான் ,மருதமுனை)

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் நக்கி விஷத்தை கக்கிவருகிறார் தவம். ஆனால் வேலையற்ற பட்டதாரிகள் விடையத்தில் நக்க நினைத்தது அவரின் இருப்புக்கு சங்கூதும் நடவடிக்கையாக மாறப்போவதனை நினைக்கையில் கவலையாக இருக்கிறது. நண்பர் தவம் ஆட்சி அதிகாரத்தை வழங்குவதும் எடுப்பதும் அல்லாஹ் ஒருவனே என்கின்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர். ஒவ்வொரு முஃமீனுடைய நிலைப்பாடும் அவ்வாறுதான்.

இன்று காரைதீவில் நாற்பத்தைந்து நாட்களைக் கடந்தும் சத்தியாக் கிரகத்தை அனுஷ்டித்து வரும் பட்டதாரிகளை கடந்த திங்கழன்று( 03/04/2017 ) நான் சந்தித்திருந்த வேளையில் அவர்களுடைய ஆதங்கத்தினை என்னிடம் கொட்டித்தீர்த்ததன் நிமித்தமும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கிக் கேட்டதன் அடிப்படையிலும் , ஊரில் நின்ற அமைச்சரை சந்திக்கும் அனுமதியினை நானே பெற்றுக் கொடுத்திருந்தேன்.

அதன் பிரகாரம் மறுநாள் 04/04/2017 அன்று அந்தி நேரம் ஒதுக்கப்பட்டதன் பிரகாரம் வேலையற்ற பட்டதாரி சங்கத்தலைவர் ஜெஸீர், பிரதித்தலைவர் பஸ்லுல், மதனி, றினோஸ்,மாற்றுமத சகோதரர் திலீபன் உட்பட நானுமாக அறுவர் தலைவரின் கிழக்கு வாசல் இல்லத்தில் மாலை 4.45 தொடக்கம் இரவு 8.00 மணிவரை கலந்துரையாடலில் ஈடுபட்டுவிட்டு வந்தோம். அதன்போது பட்டதாரிகள் தமது நிலை தொடர்பிலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் தலைவரிடம் எடுத்துக் கூறினர். தங்கள் இருப்பிடமாகிய காரைதீவை வந்து பார்வையிடுமாறும் அழைத்தனர். ஆனால் எந்த விதமான பதவியிலும் இல்லாத தான் அவ்விடத்துக்கு வந்து படம் காட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை என தலைவர் மறுத்தார்.

ஆனால் பட்டதாரிகளோ நீங்கள் குறித்த இடத்துக்கு வருவதன் மூலம் இயங்கா ஜடங்களாக இருக்கும் அரசியல் வாதிகளை இயங்கு நிலைக்கு மாற்ற முடியும். நீங்கள் செயல் வீரர். உங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம். கடந்த காலங்களில் தவறான புரிதல்களே வெறும் நச்சு மரங்கள் மாகாண சபையிலும் பாராளுமன்றிலும் வீற்றிருக்கக் காரணமாகிவிட்டது. தயவு செய்து வாருங்கள். நீங்கள் வந்தால் அவர்கள் பயத்திலாவது இயங்குவார்கள் என்று கூறினார்கள்.

அதன் போது பட்டதாரிகளின் உருக்கமான வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட தலைவர், நான் மேற்படி விடையத்தினை அமைச்சரவையில்  அங்கம் வகிக்கும் எனது நண்பர்களிடமும் , முடிந்தால் கட்சித்தலைவர்கள் ஒன்று கூடலின் போது ஜனாதிபதியிடம் ஒப்புவித்துவிட்டு தீர்வாக எதையாவது பெற்றுக்கொண்டு உங்களை வந்து காரைதீவில் சந்திப்பேன் என்றார். மாஷா அல்லாஹ் அவர் சொன்னது போலவே அமைச்சர் எஸ்.பி. திஸானாயகாவை அழைத்து வந்து தான் செயல் வீரன் என்பதனை (11/04/2017)நிறுவினார்.

இதன் பின்னணியில் இவ்வளவு விடையங்கள் இருக்க, காரைதீவுப் பக்கம் வந்து பட்டதாரிகளை எட்டியும் பார்க்காத தவம் நச்சு நாக்கால் நக்க முனைவது தகுமா? ஆட்சியில் இருந்து கொண்டே அமைச்சர் ஹக்கீமால் ஏன் எஸ்.பி யை அழைத்து வர முடியாமல் போனது? ஹாபிஸ் நசீரால் வாக்குறுதி வழங்கிய தினமும் காலவதி ஆகிவிட்டதாமே! மாகாண சபை உறுப்பினர் தவம் அதை என்னவென்று கேட்டுத் தீர்த்திருக்கலாமே! வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றம் எனும் நிலையை நண்பர் தவம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *