இந்தியாவில் பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து போட்டிப்போட்டு அழகு சாதன பொருட்களை விற்கும் போட்டியில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
அப்படி, டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் பிர்லா குழுமத்தின் தலைவர், குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா, இந்திய காஸ்மெட்டிக்ஸ் பிரிவில் கால் பதித்து பல விற்பனை பொருட்களை அறிமுகப்படுத்தி விற்று வருகிறார்.
62 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு வைத்திருக்கும் அனன்யா பிர்லா, பிர்லா காஸ்மெட்டிக் என்ற பெயரில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே டாப் கோடிஸ்வரர்களின் ஒருவரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி இந்தியாவில் சில்லறை வணிகப்பிரிவில் பேஷன் மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் பிர்லா மகள் அனன்யாவும் அம்பானி மகள் ஈஷாவும் கடும் போட்டியை காஸ்மெடிக்ஸ் பொருட்களை விற்பனை செய்வதில் போட்டியிட்டு வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.