பிரதான செய்திகள்

அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சில் விரைவில் மாற்றம்

அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ் பத்திரிகை ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.


இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விடயதானங்களில் சிலவற்றை இராஜாங்க அமைச்சுக்களுக்கு அவர் பகிரவுள்ளார்.


அதேபோல சில இராஜாங்க அமைச்சுக்களின் பெயர்களில் மாற்றத்தை கொண்டுவரவும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.


பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இந்த மாற்றங்கள் நிகழலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் பெண்களுக்கு சுகாதர வசதிகளை கொடுக்கும் சஜித்

wpengine

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் படுகொலை

wpengine

பாதாள உலக நடவடிக்கைகளை 5 மாதத்திற்குள் கட்டுப்படுத்தாவிட்டாலும், அச்சம்மின்றி வாழவ சூழல் விரைவில் .

Maash