நாடாளுமன்ற பிரதி சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர், துறைமுக மற்றும் கப்பல்துறை மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நான்கு பதவிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் சுமத்திபாலவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு புதிய அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதற்கும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சரான அர்ஜுன ரணதுங்கவை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக நியமிப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், இவை தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான இறுதி முடிவுகளும் எட்டப்பட்டவில்லை என்றும் அறியமுடிகின்றது.