பிரதான செய்திகள்

அமைச்சுப் பதவிகளை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை

இராஜினாமாச் செய்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நேற்றைய தினம் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவியை மீண்டும் பைசல் காசிமுக்கு வழங்குமாறும், ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் பதவியை அலி சாஹிர் மௌலானாவுக்கு மீண்டும் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த அமைச்சுப் பதவிகளை மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு பிரதமர் அலுவலகம் ஜனாதிபதி செயலகத்திடம் எழுத்து மூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மீண்டும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான தீர்மானமொன்றை மேற்கொள்ள அவருக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ரமழான் பண்டிகைக்கு முன்னதாக முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளை ராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் கடும் மழை! நானாட்டான் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

wpengine

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வைத்தியசாலையில் அனுமதி.

Maash

மன்னாரில் சிங்கள அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும்! அமைச்சர் றிஷாட்டிற்கு பிரதி

wpengine