பிரதான செய்திகள்

அமைச்சின் உப அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைப்பு

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினுடைய உப அலுவலகம் இன்றுகாலை மாங்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.

முன்னதாக மாங்குளம் இத்தியடி சித்தி விநாயகர்  ஆலயத்திலிருந்து படங்கள் எடுத்துவரப்பட்டு சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் அவர்களால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.
இதன்போது கலந்துகொண்ட பலரும் நீண்ட நாளாக வடமாகாண சபைக்கான அலுவலகங்கள், மாங்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னுதாரணமான செயற்பாடு என அமைச்சின் அமைச்சர் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், தியாகராசா, நடராஜா, இந்திரராசா, சிவயோகன், தர்மலிங்கம், தவநாதன், ஜெயதிலக மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மயூரன் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

இந்தியாவில் ஏன் மயில் தேசிய பறவை? உட­லு­றவு கொள்­வ­தில்லை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நடுத்தெரு அரசியலும்

wpengine

ஹிஸ்புல்லாஹ் நகரில் சார்ஜர் இணைக்கப்பட்ட தொலைபேசியில் நீண்டநேரமாக உரையாடிய இளைஞர் உயிரிழப்பு

wpengine