பிரதான செய்திகள்

அமைச்சர் ஹாபீஸ் நஷீர் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது.

சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் நுவரெலியா நோக்கி பயணித்த ஹெலிகொப்டர் மோசமான வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று காலை திடீரென தரையிறக்கப்பட்டது.

மழையினால் கொத்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால், ஹெலி தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அமைச்சரும் விமானியும் சுமார் 45 நிமிடங்கள் விமானத்தில் தங்கியிருந்தனர்.

நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரானதையடுத்து , நுவரெலியாவிலிருந்து பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் ஏற்றிக்கொண்டு ஹெலிகொப்டர் மட்டக்களப்புக்கு புறப்பட்டுச் சென்றதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

Related posts

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அறிக்கை

wpengine

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த பலர் வாழ்த்து

wpengine

மன்னார் இணையத்தின் இன்னொரு சேவையாக “கேள்வி-பதில்”

wpengine