Breaking
Mon. Nov 25th, 2024

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிப் பிரதேசத்திலுள்ள 30 கிராமங்களின் தலைநகர் பிரதேசமாக சிலாவத்துறை தற்போது இருந்துவருகின்றது.  பலவந்த வெளியேற்றத்தின் பின்  சிலாவத்துறை கடற்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. என்பதை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

முஸ்லிம்களுடைய அனைத்து கட்டங்களும் அழிந்தன.2002 இல் கணிசமான முஸ்லிம்கள் மீள்குடியேறி இருந்தும் அருவியாற்றுக்குத் தென்பகுதி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.

2009 இல் பிரதேசம் மீட்கப்பட்டு, மக்களிடம் குறிப்பிட்ட பிரதேசம் ஒப்படைக்கப்பட்டது.

சிலாவத்துறையின் பழைய காணிகள்   இன்னும் விடுவிக்கப்படவில்லை.நகர் முன்னேறத் தவழ்கிறது.25 வருட வளர்ச்சியில் பின்னோக்கிச் சென்றுள்ளது.வங்கிகளின் தேவைகள் குறித்து பலமுறை இணையத்தில் செய்தி வெளியிட்டபின் அரச வங்கியான மக்கள் வங்கியின் அடகு நிலையம்  திறக்கப்பட்டமை பாராட்டத்தக்கது.

குடியேறிய மக்களின் தொகை போதாமை,நகரின் குறை விருத்தி போன்றவற்றால் ஏனைய அரச,தனியார் வங்கிகள் களமிறங்கப் பயந்தன.

இருக்கின்ற மக்கள் வங்கியும் ஏ.டி.எம். மெசினைப் பொருத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஒருவருக்கு விடுமுறை நாட்களில் அல்லது இரவில் பணம் தேவை என்றால் என்ன செய்வது.

இவ்விடயம் பலமுறை பேசப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் .ஒரு தனியார் வங்கி சிலாவத்துறையில் திறக்கப்பட வேண்டும்.

பெட் காட்டைத் தனது பையில் வைத்துக் கொண்டு தகவல் தொழினுட்பத்தை பயன்படுத்த இம்மக்களுக்கு உரிமை இல்லையா ?உடனடியாக ஏ.டி.எம். மெசினைப் பொருத்த மக்கள் வங்கியின் வட பிராந்தியபபணிப்பாளர் நடவடி;க்கை எடுப்பாரா ?

நகர அபிவிருத்தி மற்றும்  நீர்வழங்கல் அமைச்சு யாரின் கையில் உள்ளது. ஹக்கீம் அமைச்சரே முசலி மக்களின் அபிவிருத்தி பற்றி நிங்கள் சிந்திக்க முடியாதா?

நகரம் வளர்ந்தால் பல அரச,தனியார் வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு  சி்லாவத்துறை நகருக்கு வரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமாகிய றிசாத் பதியுதின்  எ.டி.எம்.மெசின் சிலாவத்துறையில் துரிதமாகப் பொருத்த உரிய அதிகாரிகளைப் பணிக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *