பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீம் தலைமையில்இன்று நிவாரண பணி (படங்கள்)

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்களும் கொழும்பு மாவட்ட கட்சித் தொண்டர்களும் இன்று வெள்ளிக்கிழமை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு அமைச்சர் ஹக்கீமினால் உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

வெல்லம்பிட்டி கொலன்னாவை கொடிகாவத்தை கொஹிலவத்தை உட்பட வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேச மக்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் பகல் உணவு கட்சி தலைமையகம் தாருஸ்ஸலாமில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.13240617_1817344315165575_2797809976365304934_n

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களும் மழையினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.13244788_1817343665165640_1080112870526506633_n

அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பிரஸ்தாப நிவாரண நடவடிக்கையில் கலந்துகொண்டார்.

வெல்லம்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் காரணமாக மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ள பிரதேசங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீனின் வழிகாட்டலில் மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் தலைமையிலான கட்சியின் அனர்த்த நிவாரண குழு மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றது.13230179_1817344741832199_8773496409547857115_n

Related posts

தொலைபேசிகள் அழைப்புகளால் குழப்பத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

பிரதியமைச்சர் ஹரீஸ் மல்லாக்காக படுத்து துப்புவதை போல் அமைந்திருக்கிறது

wpengine