பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமின் சபையில் கொழும்பில் நீர் வெட்டு

அத்தியாவசிய தேவையொன்றிற்காக கொழும்பு நகரின் சில பிரதேசங்களுக்கு
இன்று மதியம் 12 .00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை  நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


கோட்டை மா நகர சபை பிரதேசம் , பத்தரமுல்லை , கொஸ்வத்த , கலபலுவாவ , தலவதுகொட , ஜயவடநகம , மாலபே , ஹோகந்தர , மஹரகம , பொரலெஸ்கமுவ நகர சபை ஆளுகைப் பிரதேசம் மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களுகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை , கொழும்பு 06 மற்றும் கொழும்பு 08 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்கப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

வடக்கு,கிழக்கில் எங்கு மலைகளைக்கண்டாலும் புத்தரை அமரவைப்பதுதான் அவரது வேலை

wpengine

மசாஜ் இலஞ்சம்கோரி வாக்குவாதம்!!! மூன்று போலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!!!

Maash

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம்!

Editor