பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமைச்சர் ஹக்கீமால் ரௌடி காங்கிரஸ் தலைவராக பாயிஸ் நியமனம் செய்யப்படுவாரா?

(இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா)

முஸ்லிம் காங்கிரசுடன் பாயிஸ் இணைந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது.இது தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மீதான எதிர் விமர்சனங்களை பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மகிழ்வை கொடுக்கத் தானே வேண்டும்.

நேற்றுமுன் தினம் புத்தளத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வன்னியை இழந்த மு.காவின் போராளிகளுக்கு பாயிசை உள் வாங்குவது விருப்பமாகவிருந்தது என்றும் அமைச்சர் றிஷாதின் அட்டகாசத்தை அடக்கவுமே பாயிசை கட்சியினுள் உள் வாங்கினேன் எனக் கூறியிருந்தார்.இது மாத்திரமல்லாது பல தடவைகள் ஒரு ரௌடியை தனது கட்சிக்குள் உள் வாங்கியது போன்ற கதைகளையும் அவதானிக்க முடிந்தது.ஒரு இடத்தில் இப்படியான ஒருவரின் தேவை கட்சிக்குள் நிலவுவதாகவும் கூறியிருந்தார்.அப்படியானால் அமைச்சர் ஹக்கீம் பாயிசை எதற்கு உபயோகிக்க முயற்சிக்கின்றார் என்பதை சிறு பிள்ளையும் அறிந்து கொள்ளும்.சில வேளை அமைச்சர் ஹக்கீம் பாயிசை முஸ்லிம் காங்கிரஸின் ரௌடி காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தன்னை யாராவது ரௌடி என அழைக்கும் போது அதனை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இது பாயிஸின் உள்ளதையும் நிச்சயம் தைத்திருக்கும்.ஒருவரின் திறமைக்கும் ஏற்பவே அவரை உபயோக்கிகலாம்.அமைச்சர் ஹக்கீம் பாயிசை ஒரு சிறந்த ரௌடியாக பார்க்கின்றார்.அப்படியானால் அவரை எந்த விடயங்களில் உபயோகிப்பார் என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.இதனை பாயிஸ் நன்கு புரிந்து கொண்டு ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாக நடப்பது நல்லது.ஒருவரை எப்படியெல்லாம் உபயோகிக்க வேண்டுமோ அப்படி உபயோகித்து தூக்கி வீசுவதில் ஹக்கீம் வல்லவர்.இதனை பாயிஸ் அறியாதவருமல்ல

 

Related posts

இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு உயரிய பொறுப்பு!

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றி எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றி பெற முடியாது

wpengine

நல்லாட்சி அரசின் 21 ஜனாஷாக்களே! ஞானசார தேரர் விடயத்தில் தீர்வு என்ன?

wpengine