பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவொன்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் நாட்டில் மோதல்கள் உருவாகக் கூடிய நிலைமையை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் ஞானசார தேரர் கருத்து வெளியிடுகையில், இவ்வாறான கலந்துரையாடல் எதிர் காலத்தில் இலங்கையில் வன்முறை உருவாகாதிருப்பதற்கான ஒரு வழி முறையாகும்.
இவ்வாறான உரையாடல் நிகழ்ந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எமது சந்திப்பு பலவித பிரச்சினைகளுக்கு தீர்வுப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்ததிருக்கிறது.
அனைவருக்கும் பயனுள்ள விதத்தில் எதிர்கால தேவைகள் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.