பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டும் சாகர தேரர்

அண்மையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பாதுகாப்போம் என்ற அமைப்பு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சகார தேரர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

கடந்த 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாஹியங்கல ஆனந்த சகார தேரர் தலைமையில் பிக்குகள் சிலர் நேற்று மல்வத்து மஹாவிகாரைக்கு சென்று மஹாநாயக்கர் மற்றும் அனுநாயக்கர்களை சந்தித்திருந்தனர்.

இதன்போது, பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசனைகளை அவர்கள் கையளித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, அண்மையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அந்த அமைப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மீன் போல் பிறந்த குழந்தை! பலர் அதிசயம்

wpengine

இடைக்கால நிதி 96மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

wpengine

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து விரல் தேய்ந்துவிட்டது

wpengine