பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாத் பதியுதீனை தவறாக சித்தரிக்கும் நோக்கத்திலேயே ஆப்பாட்டம் மஹிந்த தெரிவிப்பு

தமது ஆட்சிக்காலத்தில் வில்பத்து காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் என்பனவற்றிற்கு அனுமதி வழங்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யுத்தக் காலத்திலும் அதற்கு முன்னரும் பொதுமக்கள் வசித்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான உரிமை உள்ளப்போதும், காடுகளை அழித்து குடியேற்றங்களை முன்னெடுக்க முடியாது.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக தாம் விசேட குழு ஒன்றை நியமித்தேன்.இந்நிலையில் அண்மைக்காலத்திலேயே வில்பத்து காடழிப்பு இடம்பெற்று குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசாங்கத்தை பாதுகாக்க முற்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, தமது பிரதேச மக்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த உடனேயே தமது அரசாங்கம் வடமாகாணத்திற்கு தேர்தல் நடத்தி, வடமாகாண சபையை அமைத்து அங்குள்ள மக்களுக்கான ஜனநாயகத்தை உறுதி செய்தது.ஆனால் தற்போதைய அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தலை நடத்தாமல், ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் தேர்தல் வேண்டும் என்ற அடிப்படையில் எந்த குரலையும் எழுப்பாதிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வில்பத்துக் காட்டை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழிக்கின்றார் என்ற குற்றச்சாட்டில், வடக்கில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல கோஷங்களை முன்வைத்து நாடு பூராகவும் உள்ள 28 பிரதான சிங்கள நகரங்களில் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

28 நகரங்களில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களைக் கொண்ட நகரங்களிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உருவப் பொம்மைகள், அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட பதாதைகள் மற்றும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் புகைப்படங்களை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டுள்ளன.

“இலங்கையைப் பாதுகாப்போம்” அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களே பெருமளவில் பங்குகொண்டிருந்தனர்.கடந்த காலங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின் போது பௌத்த தேரர்களும், சிங்கள கடும் போக்காளர்களும் பங்குகொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு முஸ்லிம்களையும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்திலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு சிங்கள ஊடகங்களும், சிங்கள சமூக வலைத்தளங்களும் அதிக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வில்பத்து தொடர்பில் மிகப்பெரிய பொய்யான பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. வில்பத்து வனப்பகுதியை எவராவது அழிப்பார்களாயின் அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள்.

வில்பத்து வனப்பகுதியை நானோ என்னைச் சார்ந்த சமூகமோ அழித்து நாசப்படுத்தவில்லை, சில சிங்கள ஊடகங்களும், சிங்கள சமூக வலைத்தளங்களும் போலியான செய்தியை வெளியிட்டுள்ளதென நாடாளுமன்ற அமர்வுகளில் ரிஷாத் பதியுதீன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சு பதவியில் மாற்றம்

wpengine

ATM இல் நிதி மோசடி! கவனம்

wpengine

சஜித் வன்னி பள்ளிவாசல்களுக்கு விஜயம் – ரிஷாட், புத்திக்க பத்திரன ஆகியோரும் உடனிருந்தனர்!

wpengine