(ஏ.எச். எம். பூமுதீன்)
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போக்கு கடந்த 5 வருடங்களுக்குள் எல்லைமீறி சென்றவண்ணமுள்ளன.
மஹிந்த ஆட்சியின் இறுதி இரு வருடத்தில் ஆரம்பித்த இனவெறி, நல்லாட்சியிலும் இன்றுவரை தொடர்கின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவெறிக்கு 5 வருடம் பூர்த்தி என்றால், அமைச்சர் ரிஷாத்தை ஒழித்துக்கட்டுவதட்கும் இந்த 5 வருடம் மறைமுகமாக துணை நின்றிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்தவண்ணமுள்ளது.
ஞான சார தேரரின் – எடுத்ததெட்கெல்லாம் அமைச்சர் ரிஷாத்தை வம்புக்கு இழுப்பதன் மூலம் இந்த சதி அம்பலத்துக்கு வருவதாக அறியமுடிகின்றது.
ஞான சார தேரரின் கொட்டத்தை அடக்க முதலில் முட்பட்டு இன்றுவரை அவரின் கொட்டத்தை அடக்க துணிச்சலாக நின்று செயட்படும் ஒருவர் ரிஷாத் பதியுதீன் என்பதில் முஸ்லீம் சமூகத்துக்குள் எதிர் கருத்து இல்லை.
இந்தவேளையில்தான் ரிஷாத்தை ஒழித்துக்கட்டும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
அத்துடன், மஹிந்த அரசை கவிழ்க்க முதலில் துணிந்து வெளியேறியதால் அந்த சதி திட்டம் மேலும் உக்கிரமடைந்து இருந்ததாம்.
இப்போது, அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான அரசியல் போக்குடைய கூட்டமைப்பின் சிலர், டயஸ்போரா போன்றோருடன் முஸ்லீம் பெயர் தாங்கிய அரசியல் எதிரிகளும் இச் சதிக்குள் அங்கத்தவர்களாக தாமாகவே சென்று இணைந்துள்ளதாகவும் அந்த நம்பகர தகவல்கள் குறிப்பிட்டு காட்டுகின்றன.
இவ்வாறு அமைச்சர் ரிஷாத்தை அழிக்க முயல்வதன் ஒரே நோக்கம் , முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவர் எதிர்ப்பு காட்டுவது , குரானை விமர்சிப்பதுக்கு எதிராக நீதிமன்றம் சென்றது. ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகள் சும்மா இருக்குபோது ரிஷாத் மட்டும் அவைகளுக்கு எதிராக போராடுவது என்ன என்ற ஆத்திரமே அவரை ஒழித்துக்கட்ட முயல்வதன் பின்னணி ஆகும்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை – அரசியல் அதிகாரத்தில் இருந்து அல்லது ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டால் , முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கை இலகுவாக முன்னெடுக்கலாம் என்ற நிலைப்பாடே அந்த சதி கும்பலின் திட்டம் என அறிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் றிஷாத்தின் அரசியல் அதிகார பலத்தை முதலில் குறைப்பது இந்த சதியின் முதல் திட்டம். அதன்படி, அமைச்சு பலத்தை குறைக்க அமைச்சரவை மாட்டத்தின் போது முஸ்லீம் பெயர் தாங்கிய அரசியல் எதிரிகளால் சூழ்ச்சி மேட்கொள்ளப்பட்டது. அதட்கு ஆதாரமாக முகா எழுத்தாளர்கள் தபால் அமைச்சு என்று குறிப்பிட்டதை கூறக்கூடியதாக இருந்தது.
இதன்பின்னர், வன்னி மாவட்டத்தில் ரிஷாத் பதியுதீனை தோற்கடிக்க திட்டம் வகுப்பது. வில்பத்து விடயத்தை தூக்கிப்பிடித்து , முசலி பிரதேசவாதத்தை முன்னெடுத்து அவரை தோற்கடித்து அரசியலில் இருந்து தூரமாகி விடுவது இரண்டாவது சதி திட்டம்.
இவை இரண்டும் சாத்தியப்படாத போது, அமைச்சர் ரிஷாத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவது.
இவ்வாறான 3 வகை திட்டம்தான் மேற்சோன்ன 4 குழுக்களிடமும் இருப்பதாக தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
எனவே, முஸ்லிம்கள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு எமது இருப்பை பாதுகாக்க முயல்வதோடு அதட்காக உயிரை துச்சமென மதிக்கும் அமைச்சர் ரிஷாத்தை பலப்படுத்த ஓரணி திரள்வோம்.
சதி காரனுக்கெல்லாம் சதிகாரன் அல்லாஹ் என்பதை இங்கு உரத்த குரலில் முழங்குவோம்.