பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாதை எச்சரிக்கும் பாணியில் கெஞ்சும் வை.எல்.எஸ் ஹமீத்

2016-11-05ம் திகதி டெய்லி சிலோன் கேள்விக்கு பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் தொடர்பில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை அள்ளி வீசி இருந்தார்.

 

இதன் போது கொதித்தெழுந்த அமைச்சர் றிஷாதுடைய ஆதரவாளர்கள் வை.எல்.எஸ் ஹமீதிடம் பல கோணங்களில் வினாக்களை தொடுத்திருந்தனர்.வை.எல்.எஸ் ஹமீத் இதனை அமைச்சர் றிஷாத் கூலிக்கு ஆள் வைத்து எழுதுவதாக கூறியுள்ளார்.அமைச்சர் றிஷாத் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியின் தலைவர்.அவருக்கு பல இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இருப்பார்கள்.கிட்டத்தட்ட பதின்மூன்று வருடங்கள் அமைச்சராக இருந்துள்ளார்.இதன் போது பல்லாயிரக்காணக்கான மக்களுக்கு அவர் உதவி இருப்பார்.இப்படியான சந்தர்ப்பத்தில் அவர் பற்றி யாராவது கதைக்கும் போது வை.எல்.எஸ் ஹமீதை நோக்கி விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாதவொன்று.வை.எல்.எஸ் ஹமீதிடம் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் இல்லையென்றால் அப்படியான விடயங்கள் பற்றி அவர் வாய் திறக்கக் கூடாது.

 

வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளர்கள் தன் மீதான விமர்சனங்களை நிறுத்தாத போது அமைச்சர் றிஷாத் பற்றிய தகவல்களை இன்னும் இன்னும் வெளியிட வேண்டி வருமென எச்சரித்துள்ளார்.தற்போது வை.எல்.எஸ் ஹமீத் தான் அமைச்சர் றிஷாத் மீது சில சர்ச்சைக்குரிய விடயங்களை கூறி பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார்.சில நாட்கள் முன்பு அ.இ.ம.காவின் பிரச்சினைகளை ஆராய்தல் எனும் தலைப்பில் கூட டெய்லி சிலோனில் கூறிய விடயங்களை விடவும் பாரதூரமான விடயங்களை கூறி இருந்தார்.இப்போது அமைச்சர் றிஷாத் இதனை நிறுத்த வேண்டும் எனக் கோருவது நகைச்சுவையானது.நிறுத்த வேண்டியவர் வை.எல்.எஸ் ஹமீத் தான்.இது சொல்லும் செய்தி இம்முறை அமைச்சர் றிஷாதின் ஆதரவாளர்கள் கேட்ட கெள்விகள் வை.எல்.எஸ் ஹமீதை திணறச் செய்துள்ளது.அமைச்சர் றிஷாதை எச்சரிக்கும் பாணியில் கெஞ்சியுள்ளார்.

 

இப்றாஹிம் மன்சூர்

ஆசிரியர்

கிண்ணியா

Related posts

சதிகாரர்கள் காலத்தையும், கவனத்தையும் வேறு திசைகளில் திருப்ப முயற்சிக்கின்றனர்- அமைச்சர் றிசாட்

wpengine

இலங்கை சுதந்திரத்தின் பின்னர்! முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இல்லாத அமைச்சரவை

wpengine

மன்னாரில் தேசிய நத்தார் விழா! ஜனாதிபதி பங்கேற்பு

wpengine