கடந்த ஞாயிறு கிழமை மாலை சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வை.எஸ்.ஹமீட் , முசலி பிரதேசத்தை சேர்ந்த வன்னியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மற்றும் புத்தள மாவட்ட முன்னால் பிரதி அமைச்சர் பாயிஸ் கலந்துகொண்டார்கள். தமிழ் பேசும் நேயர்களை அதிகம் கவர்ந்த நிகழ்சியாகவும்,பலருடைய விமர்சனத்தை கொண்ட மின்னல் நிகழ்ச்சியாக இருக்கின்ற போது முஸ்லிம் சமூகத்தின் பல பிரச்சினைகள் இருந்து வருகின்ற நிலையில் குறிப்பாக வடக்கில் இருந்து புலிகளினால் விரட்டப்பட்ட மன்னார் முசலி மக்களின் பல பிரச்சினைகள் பற்றி பேசாமல் அமைச்சர் றிஷாட் பதியுதீனை பற்றியும், கொஞ்சைபடுத்தும் ஒளிப்பதிவு நிகழ்வாக மின்னல் ரங்கா நெறிப்படுத்தி இருந்தார்.என்பது மிகையாகாது.
அது மட்டுமல்ல அமைச்சர் றிஷாட் பதியுதீன் முசலி மக்களுக்கு எந்த வித சேவைகளை. கூட செய்யவில்லை முசலி மக்களின் பிரச்சினை பற்றி கரிசனை எடுக்கமாட்டிகின்றார். என்ற குற்றச்சாட்டுகளையும்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மற்றும் வை.எல்.எஸ்.ஹமீட் முன்வைத்தார்கள் இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முசலி மக்களுக்கு அவர் செய்த நல்ல பணிகளையும்,சேவைகளை உரத்துக் கூறுவது பொருத்தமெனக் கருதுகின்றேன்.
கடந்த பதினாறு வருடங்களாக எமது சமூகத்தின் தலைவர்களாக மதிக்கப்படுகின்ற இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைவரினதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரினதும் முசலிப்பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான செயற்பாடுகளை உற்றுநோக்குகின்றபொழுது கௌரவ முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கவேண்டிய புள்ளியும்,பெறுமதியும் பூச்சியமாகும், கொளரவ றிசாத் பதியுதீன் அவர்களுக்கு வழங்கவேண்டிய புள்ளியோ மதிப்பீடு செய்ய முடியாததாகும்.
வட
முசலிப்பிரதேச மக்களுக்கு வாழ்வியல் உரிமைகளையும் வழமான அபிவிருத்தித் திட்டங்களையும் திட்டமிட்டு செயற்படுத்துகின்ற திறமைமிகு அரசியல்வாதியாக றிசாத் பதியுதீன் அவர்களை காணுகின்றேன்.
இது போன்ற இன்னும் பல சேவைகளை முசலி மண்ணிற்கு வழங்கியமை வரலாற்றுச்சாதனைகளாகும் . இத்தனை பணிகளையும் எமது முசலிமக்களின் மீதுகொண்ட பாசத்தின் காரணமாக பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும் செய்து முடித்துள்ள பிரியமுள்ள தலைவர் றிசாத் பதியுதீன் என்பதை அன்னவரைக் குறை கூறுகின்ற அனைத்து நண்பர்களின் சிந்தனைக்கு எத்திவைக்கின்றேன்.