Breaking
Sun. Nov 24th, 2024

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இந்த நாட்டின் குறுகிய கால சிறுபான்மை சமூகங்களின் அரசியல் வரலாற்றினை நோக்குகின்ற போது திறமையும்,தியாகமும் மிக்க அரசியல் தலைவர்களில் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காஙகிரஸ் என்கின்ற கட்சியொன்றினை உருவாக்கி இதன் மூலம் ஆட்சியாளர்கள் சிறுபான்மை முஸ்லிம்களின் பலத்தை அறிந்து கொள்ளும் அளவுக்கு அரசியலில் வளர்ச்சியினை கொண்ட ஒரு தலைவராக எம்மால் றிசாத் பதியுதீன் என்கின்ற சமூககத்தின் ஆளுமையினை பார்க்க முடிகின்றது.

சவால்களும்,சந்தர்ப்பவாதங்களும்,கழுத்தறுப்புக்களும்,முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளும் எழுகின்ற போதெல்லாம் அதற்கு முகம் கொடுக்கும் அளவுக்கு பக்குவப்பட்ட ஒரு அரசியல் தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீனை இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் அடையாளப்படுத்திவருகின்ற நிலையில் இந்த தலைமைத்துவத்தை அடக்கி ஒடுக்கி,அபாண்டங்களை அவதுாறுகளை அள்ளி வீசி மனமுடையச் செய்ய முன்டுக்கப்பட்டுவரும் நகர்வுகளை மழுங்கடிக்க வேண்டியது எமது கடமையாக மாறியுள்ளது.

இந்த நிலையில் வடக்கில் இருந்து இனச் சுத்திரிகப்பு செய்யப்பட்டு வாழ்விடம் பறிக்கப்பட்டு அகதி வாழ்க்கையினை அனுபவித்து,அந்த மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்று வடபுல சமூகத்தின் காவலனாக இன்றும் இருந்து வரும் றிசாத் பதியுதீன் என்கின்ற அரசியல் தலைமைக்கு எதிராக சமீபகாலமாக முஸ்லிம் பெயர் தாங்கிய சிலரினால் வீசப்படும் எரிகனைகள் வேதனைதருவனவாக இருந்த போதும்,அல்லாஹ்வின் உதவியினால் இன்று இந்த நாட்டு பெரும்பான்மை முஸ்லிம்களின் பிரார்த்தனைகள் இந்த றிசாத் பதியுதீன் என்கின்ற அரசியல் ஆளுமைக்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.இந்த அரசியல் ஆளுமையின் பெறுமதியும்,பெறுமானமும் சிலருக்க புரிவதில்லை.ஏனெனில் அவர்கள் ஒரு தரப்பு நியாயக் கொள்கையினை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள்,இவர்கள் தான் இந்த தலைமையினை விமர்சிப்பதும்,ஒவ்வாத கருத்துக்களை சமூகத்தில் பரப்ப முற்படுபவர்கள் என்பது நிதர்சனம்.

குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை பொறுத்த வரையில் இடம் பெயர்வுக்குள்ளான சமூகம் புத்தளத்திற்கு வந்த பிறகு,அவரது அரசியல் காலத்துக்குள் புத்தளம் மக்களுக்கு செய்துள்ள நன்மைகளை இன்றும் இம்மக்கள் நன்றியுணர்வுடன் பேசுவதை சதாவும் கேட்க முடிகின்றது.தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளத்தில் தோல்வி கண்டுவிட்டார் என்று சில முக நுால்கள் சக்கரம் வி்ட்டு வருகின்றதை புத்தளத்தின் பெரும்பான்மையான மக்கள் நிராகரித்துவருகின்றனர்.நடை பெற்று முடிந்த தேர்தல் ஒரு வகையான பிரதேச கருத்துக்களையும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளத்தினை ஆக்கிரமித்துவிட்டார் என்கின்ற கோஷத்தை கேட்க முடிந்தது.

இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியினை போன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளத்தில் தோல்வி அடைந்த மாதிரியான கணிப்புக்களை சிலர் முகநுால்களை பிரசுரித்துவருவதை பார்க்கின்ற போது நகைப்புக்கிடமாக இருப்பதுடன்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் பலம் ஓரளவு வெளிப்படுத்தப்பட்டுமுள்ளது.அமைச்சர் றிசாத் பதியுதீனின் பங்களிப்புடன்.கிழக்கிலும்,வடக்கிலும்,வடமேல் மாகாணத்தின் குருநாகலயிலும்,மத்திய மாகாண கண்டியிலும் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கையினை பார்க்கின்ற போது தற்போது அவர் மீது சிலரால் வீசப்படும் சேறுகள் ஒருபோதும் எந்த வித தாக்கத்தினையும் செலுத்தப்போவதில்லை என்பதை உணர்த்தி நிற்கின்றது.

இதனையும் மீறி அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளத்துக்கு செய்துள்ள அபிவிருத்திகள் ஒரு போதும் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது.புத்தளத்தின் அரசியலில் றிசாத் பதியுதீன் ஒரு பெறுமதிக்க மனிதர் என்பதை வரலாற்று புத்தகத்தில் எமது புத்தி ஜீவிகள் பதிவு செய்துள்ளார்கள்.வெறுமனே அரசியல் பதவிகளுக்காக பேசும் தனிநபர்களை கடந்து சமூகம் என்கின்ற சிந்தணையில் இருப்பவர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீனின் பெறுமானம் பாதுகாக்கப்பட வேண்டியது என்கின்ற கருத்தை உணர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்கின்ற ஆளுமையினை பாதுகாக்க வேண்டியது எமது சமூகத்தின் கடமை என்பாதல் 40 மக்கள் பிரதி நிதிகளை கொண்டிருந்த றிசாத் பதியுதீன் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று 150 க்கும் மேற்பட்ட மக்கள் பிரதி நிதிகளை பெற்றுள்ளமை ஒரு சான்றாகும்.துாற்றுபவர்கள் துாற்றற்டும் போற்றுபவர்கள் போற்றற்றும்,என்கின்ற சான்றோர் வார்தை்தைக்கமைய அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பணிகள் தொடர்ந்தும் எவ்வித சோர்வுகளும் இல்லாமல் எமது நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *