பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுனுக்கு எதிரான பிரேரனை நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள்

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தலைமையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் ஆரம்பமே பிழையானதாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் திகதி 2018-05-09 என குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்து விடயங்களை உள்ளடக்கி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை யோசனை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் அதில் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களே அதிகளவில் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டிருந்தனர் என்ற போதிலும் இந்த திகதி பிழையை எவரும் அவதானித்திருக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

Related posts

சற்றுமுன்பு சுந்தரம் அருமைநாயகத்தையும், ரூபவதி கேதீஸ்வரனையும் தொடர்புகொண்ட மஹிந்த

wpengine

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் சிரமம்

wpengine

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

wpengine